Australia Nagarathar Association Inc.

 


சிவமயம்
ஸ்ரீ முருகன் துணை 
 
 
ஆஸ்திரேலியா நகரத்தார் அஸோஸியேஷன்
வைகாசி விசாகத் திருவிழா அழைப்பிதழ்
 
 
அன்புடையீர்,

செட்டி மகன் முருகனின் பிறந்தநாளாக கொண்டாடப்படும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 26 ஆம் நாள் (ஜூன் 9, 2025) திங்கட்கிழமை ஹெலென்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் முருகன் சன்னதி முன் விஷேஷ பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப்பெற்று வளமுடன் வாழ வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல் 

காலை 9:30 மணி முதல் அபிஷேகம், ஆராதனை, அதனைத் தொடர்ந்து வருகை தரும்நகரத்தார்கள் அனைவரும் ஒன்றாக பக்தி பாடல்கள் பாடுவர்.


மதியம் 12:30 - ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு
 
குறிப்பு: செலவுகள் வருகை தந்துள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். விரும்புபவர்கள் பிரசாதம் தாராளமாக கொண்டுவரலாம்.

இந்த நிகழ்வு தொடர்பான கேள்விகள் அல்லது தெளிவுகளுக்கு, தயவுசெய்து எங்களை ec@nagarathar.org.au இல் தொடர்பு கொள்ளவும்.

தாங்கள் தங்கள் பதிவினை இந்த இணைப்பு வாயிலாக வைகாசி விசாகம் பதிவு மே மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
இங்ஙனம்,
 
நாராயண் பெரிச்சியப்பன்
செயலாளர் 
ஆஸ்திரேலியா நகரத்தார் அஸோஸியேஷன்   
June 2025
09
REGISTER
FIND US ON FACEBOOK FIND US ON FACEBOOK
ANA WEBSITE ANA WEBSITE
EMAIL EXECUTIVE COMMITTEE EMAIL EXECUTIVE COMMITTEE
 'ஆனா'  தமிழின் உயிர் எழுத்து, ஆஸி நகரத்தார் தனி எழுத்து!






This email was sent to << Test Email Address >>
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Australia Nagarathar Association · ANA · Sydney, NSW 2000 · Australia

Email Marketing Powered by Mailchimp